மேலும் செய்திகள்
ஊட்டச்சத்து விழிப்புணர்வு
10-Sep-2024
திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி உணவியல் மற்றும் ஊட்டச்சத்து துறை சார்பில் தேசிய ஊட்டச்சத்து வார விழாவை முன்னிட்டு மாணவர்களால் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய உணவு வகைகள் கண்காட்சி, விற்பனை நடந்தது. செயலாளர் விஜயராகவன் துவக்கி வைத்தார். முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். சுயநிதிப்பிரிவு இயக்குனர் பிரபு, துறை தலைவர் கோபிமணிவண்ணன் முன்னிலை வகித்தனர். இயற்கை உணவுகளை தேர்வு செய்வது, உணவுப்பொருட்கள் வீணாவதை தவிர்க்கும் முறைகள் விளக்கப்பட்டன. பேராசிரியர்கள் சரஸ்வதி, உமா மகேஸ்வரி கண்காட்சியை ஒருங்கிணைத்தனர். ஆசிரியர்கள் நிதியுதவி
மதுரை: டி.கல்லுப்பட்டி அருகே கொல்லவீரம்பட்டி மகேஸ்வரி மகன் ஜோதிராகவ். ஒத்தக்கடை வேளாண் கல்லுாரி முதலாண்டு மாணவரான இவரது ஏழ்மை நிலையால் படிக்க நிதியுதவி வழங்க ஆசிரியர்கள் முயற்சி மேற்கொண்டனர். நண்பர்கள் வட்டார அமைப்பின் சார்பில் ரூ.20 ஆயிரத்து 700ஐ வழங்கினர். அமைப்பின் தலைவர் பாஸ்கரன், பொதுச் செயலாளர் விஜயபார்த்திபன் கல்வி கட்டணத்தை வழங்கினர். ரத்ததான முகாம்
மதுரை: யாதவர் கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., அமைப்பு, அரசு மருத்துவமனை சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.முதல்வர் ராஜூ தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ்., அமைப்பு ஒருங்கிணைப்பாளர் வீரபாண்டியன் வரவேற்றார்.முன்னாள் செயலாளர் கண்ணன் ரத்த தானம் பற்றிய கருத்துகளை எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். செயலாளர் கண்ணன், தலைவர் ஜெயராமன், பொருளாளர் கிருஷ்ணவேல், இணைச் செயலாளர் முத்துக்கிருஷ்ணன், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மணிச்செல்வன், செந்தில், பாலகிருஷ்ணன், கோபால், சேகர், சுயநிதிப்பிரிவு இயக்குனர் ராஜகோபால், டாக்டர்கள்பேசினர். 100 மாணவர்கள் ரத்த தானம் செய்தனர். திட்ட அலுவலர் மாரியப்பன் நன்றி கூறினார். பனை விதைகள் நடவு
திருப்பரங்குன்றம்: பசுமை தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க நீர் நிலைகளில் பனை விதைகள் நடும் திட்டம் தியாகராஜர் பொறியியல் கல்லுாரி சார்பில் திருப்பரங்குன்றம் பானாங்குளம் கண்மாய் கரையில் துவக்கப்பட்டது.முதல்வர் அசோக்குமார், மதுரை வனச்சரக அலுவலர் சாருமதி துவக்கி வைத்தனர். தேசிய மாணவர் படையினர், வனத்துறையினர் பங்கேற்றனர். 500க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடப்பட்டன. தேசிய மாணவர் படை அதிகாரிகள் சந்திரகுமார், சரவணகுமார் ஏற்பாடுகள் செய்தனர்.
10-Sep-2024