உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளி கல்லுாரி செய்தி

பள்ளி கல்லுாரி செய்தி

விளையாட்டு விழாமதுரை: பாத்திமா கல்லுாரியில் 71வது விளையாட்டு விழா செயலாளர் பிரான்சிஸ்கா, முதல்வர் செலின் சகாயமேரி, முதல்வர் செலின் சகாயமேரி தலைமையில் நடந்தது. எம்.பி., வெங்கடேசன் துவக்கி வைத்தார். மாணவியர் பேரவை தலைவி நேகா வரவேற்றார்.மாணவிகள் ஜோதிமணி, கவிவெண்ணிலா, கீர்த்தனா, ஹரிணி ஆகியோர் ஒலிம்பிக் தீபம் ஏற்றினர். மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பரிசளிப்பு விழாவில் விளையாட்டுத்துறை பேராசிரியை வேளாங்கண்ணி மாதரசி ஆண்டறிக்கை வாசித்தார். துணை முதல்வர்கள் பாத்திமா, ஜெனிட்டா ராணி, டயானா கிறிஸ்டி, மீனாட்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவி காவ்யாஸ்ரீ நன்றி கூறினார்.புத்தக கண்காட்சிமதுரை: தியாகராஜர் மேலாண்மைப் பள்ளி நுாலகம் வளாகத்தில் புத்தகக் கண்காட்சி நடந்தது. அகில இந்திய வானொலி நிகழ்ச்சி தலைவர் தாராதேவி துவக்கி வைத்தார்.மாணவி ஹரிணி ஸ்ரீ 'சுமை தாங்கி' என்ற தலைப்பில் தமது தொகுப்பு புத்தகத்தை வெளியிட்டார். முதல்வர் செல்வலட்சுமி வரவேற்றார். இயக்குநர் முரளிசாம்பசிவன், மாணிக்கம் ராமசாமி கலை கல்லுாரி முதல்வர் பத்மாவதி உள்ளிட்டோர் பேசினர். ஆசிரியர்கள், மாணவர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர். தியாகராஜர் மேலாண்மை பள்ளி தலைமை நுாலகர் ஷேக் மைதீன் ஏற்பாடு செய்தார். டீன்கள் பாலாஜி, கவுதம் சுதார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பல்திறன் போட்டிகள் திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி கணிதவியல் உயராய்வு மையம் முதுகலை மாணவர்கள் சார்பில் மாணவர்களுக்கிடையிலான கணித மெல்லிசை என்ற தலைப்பில் பல்திறன் போட்டிகள் நடந்தது. முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். துறைத் தலைவர் ஹமாரி சவுதி வரவேற்றார். செயலர் விஜயராகவன் துவக்கி வைத்தார். மதுரை காமராஜ் பல்கலை இணை பேராசிரியர் சிவக்குமார் பேசினார். 23 கல்லுாரிகளின் 235 மாணவர்கள் பங்கேற்றனர். சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி முதல் பரிசு வென்றது. உதவிப்பேராசிரியர் சித்ரா தேவி நன்றி கூறினார்.வேலைவாய்ப்பு முகாம்மேலுார்: கிடாரிப்பட்டி லதாமாதவன் கல்வி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. தனியார் நிறுவனத்தின் மனித வளத்துறை அலுவலர் முருகானந்த கணேஷ் மற்றும் கணேசன் தேர்வு செய்தனர். 96 மாணவர்கள் கலந்து கொண்டதில் 36 மாணவர்கள் வேலை வாய்ப்பை பெற்றனர். அவர்களை கல்வி நிறுவன இணை செயாளாளர் ஜெகன் மாதவன், செயல் அலுவலர்கள் முத்துமணி, மீனாட்சி சுந்தரம், காந்திநாதன், முதல்வர் தவமணி பாராட்டினர். வேலை வாய்ப்பு அலுவலர்கள் மோகன், ஹேமலதா ஒருங்கிணைத்தனர். பி.ஆர்.ஓ., பிரபாகரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி