உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளி வேன் - அரசு பஸ் மோதல்: பாதுகாவலர் பலி

பள்ளி வேன் - அரசு பஸ் மோதல்: பாதுகாவலர் பலி

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நேற்று காலை மாணவர்களை அழைத்துக்கொண்டு தனியார் பள்ளி பஸ் வந்தது. அன்பரசன் 35, ஓட்டினார். கண்டக்டராக முத்துலட்சுமி 38, இருந்தார். தேனி ரோட்டில் உள்ள பள்ளிக்கு திரும்புவதற்காக வேன் வேகத்தை அன்பரசன் குறைத்த போது, பின்னால் வந்த மதுரை - தேனி அரசு பஸ் மோதியது. பள்ளி வேன் நிலைதடுமாறி பள்ளி முன்பாக நின்றிருந்த பாதுகாவலர் வெங்கடேஷ்வரன் 60, மீது மோதியதில் அவர் இறந்தார். வேனில் இருந்த 13 மாணவ, மாணவியர்களில் 10 பேருக்கு காயம் ஏற்பட்டது. உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பஸ் டிரைவர் குபேந்திரனிடம் 45, உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !