உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளி மாணவி தற்கொலை

பள்ளி மாணவி தற்கொலை

திருமங்கலம்; திருமங்கலம் அருகே மாவிலிபட்டி ஜெயராமன், காளீஸ்வரி தம்பதிக்கு இரண்டு மகள்கள். குடும்ப பிரச்னை காரணமாக காளீஸ்வரி மகள்களுடன் தனியே வசித்தார். மூத்த மகள் ராஜராஜேஸ்வரி 12, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்தார். நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளிக்கு செல்ல தாயிடம் ரூ.20 கேட்டார். காளீஸ்வரி தன்னிடம் பணம் இல்லை. பக்கத்து வீட்டில் வாங்கித் தருகிறேன் என கூறியுள்ளார். கோபித்துக் கொண்ட ராஜேஸ்வரி வீட்டில் கதவை மூடி கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால் அருகில் இருந்தவர்கள் உதவியோடு கதவை உடைத்து பார்த்தபோது ராஜேஸ்வரி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. செக்கானுாரணி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை