ஆய்வக நுட்புநர்களின் அறிவியல் மாநாடு
மதுரை : மதுரையில் அகில இந்திய மருத்துவ ஆய்வுக்கூட நுட்புநர் சங்கம் சார்பில், ஆய்வக நுட்புநர்களின் அறிவியல் மாநாடு, மாநிலத் தலைவர் மரியதாஸ் தலைமையில் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் வளர்மதி துவக்கி வைத்தார். முதுநிலை நோய்க்கூறு இயல் நிபுணர் கோமதிநாயகம் மாநாட்டு இதழை வெளியிட, முதுநிலை ஆய்வக நுட்புநர் செல்வம் பெற்றுக் கொண்டார். காசநோய் துணை இயக்குநர் ராஜசேகரன், மருத்துவக் கல்லுாரி பேராசிரியர்கள் வசந்தபிரியன், ஜெயந்தி பிரசாத், டாக்டர் செல்வராஜ் மனோகரன் பேசினர். சங்க மாநிலச் செயலாளர் மேனியல் பாபு நன்றி கூறினார். காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. பசுமை பாதுகாப்பு இயக்க உறுப்பினர்கள் உள்ளிட்ட இயற்கை ஆர்வலர்களுக்கு பரிசு வழங்கினர். மருத்துவம், கல்வி, விளையாட்டு, சமூகப் பணிகளில் சிறந்து விளங்கிய ஆய்வுக்கூட நுட்புநர்களின் குழந்தைகள், மூத்த ஆய்வுக்கூட நுட்புநர்கள், மருத்துவ அலுவலர்கள் கவுரவிக்கப்பட்டனர். எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட அலுவலர் நாகராஜன், மீனாட்சி மிஷன் முதுநிலை மேலாளர் பாண்டியராஜன், மருத்துவ ஆய்வகங்கள் சங்கத் துணைத் தலைவர் மார்ட்டின் தேவதாஸ் உட்பட ஆய்வகப் பயிற்சி மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.