உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  அறிவியல் மாநாடு

 அறிவியல் மாநாடு

திருப்பரங்குன்றம்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி இயற்பியல் துறை சார்பில் பள்ளி குழந்தைகளுக்கான 34வது அறிவியல் மாவட்ட மாநாடு 'நீடித்த பாதுகாப்பான நீர் மேலாண்மை' என்ற தலைப்பில் கல்லுாரியில் நடந்தது. இயக்க தலைவர் ராஜேஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மலர்ச்செல்வி வரவேற்றார். கல்லுாரி தலைவர் விஜயராகவன், செயலாளர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தனர். முதல்வர் ராமசுப்பையா பேசினார். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்களின் கண்டுபிடிப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றன. இயற்பியல் துறை தலைவர் ஜெயபாலகிருஷ்ணன், இயக்கத்தின் மாவட்ட இளைஞர் செயலாளர் காமேஷ் மாநாடு ஏற்பாடுகளை செய்திருந்தனர். பொருளாளர் சிவராமன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ