உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சாரண, சாரணியர் இயக்க பொன்விழா கூட்டம்

சாரண, சாரணியர் இயக்க பொன்விழா கூட்டம்

உசிலம்பட்டி:உசிலம்பட்டியில் பாரத சாரண, சாரணிய இயக்கத்தின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பரமசிவம் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் சூசைமாணிக்கம் வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தார்.சாரணர் இயக்க மாவட்ட தலைமையிடத்து ஆணையர் ஜெகதீசன், மாவட்ட ஆணையர் ஜான்கோயில்பிள்ளை, துணைத்தலைவர் முத்தழகு, குறு சாரண ஆணையர் மதன்பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். உசிலம்பட்டி பகுதியில் சாரணர் இயக்கம் துவங்கி 50 ஆண்டுகளானதை சிறப்பாக கொண்டாடவும், விழா மலர் வெளியிடவும், இந்த கல்வியாண்டில் ராஜ்யபுரஸ்கார் விருதுக்கு கூடுதலாக மாணவர்களை தேர்வு செய்து அனுப்ப வேண்டும் எனவும் ஆலோசிக்கப்பட்டது. சாரண அமைப்பு ஆணையர் வேல்முருகன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். பயிற்சி ஆணையர் இசக்கியம்மாள் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை