சாரண, சாரணியர் இயக்க பொன்விழா ஊர்வலம்
உசிலம்பட்டி: உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் பாரத சாரண, சாரணிய இயக்கம் பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகள் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் நடந்து வருகிறது. 30 பள்ளிகளில் இருந்து 641 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். முதல் நாளான நேற்று கொடியேற்றம், அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. மாலையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. சாரண, சாரணியர் இயக்க மாவட்ட நிர்வாகிகள் தலைவர் ஜெகதீசன், செயலாளர் பரமசிவன், பொருளாளர் சூசைமாணிக்கம் துவக்கி வைத்தனர். சாரண ஆணையர் ஜான்கோயில்பிள்ளை, சாரணிய ஆணையர் ஜெசித்தாசாந்தி, அமைப்பு ஆணையர் வேல்முருகன், குருளையர் ஆணையர் மதன்பிரபு பங்கேற்றனர். இன்று பொன்விழா மலர் வெளியிடப்படுகிறது.