உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கடைகளுக்கு சீல் வைப்பு

கடைகளுக்கு சீல் வைப்பு

மேலுார் : மேலுார் பஸ் ஸ்டாண்ட் முன் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.மாவட்ட நியமன அலுவலர் ஜெயராம பாண்டியன் தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் பாரத் பாதுகாப்பான உணவுகளை தேர்வு செய்வது குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கினார். ரசாயனம் கலக்காத உணவுகளை தேர்வு செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் பால்சாமி நன்றி கூறினார்.தொடர்ந்து நடந்த ஆய்வில் பிளாஸ்டிக் பை வைத்திருந்த 2 கடைகளுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம், இரு கடைகளில் 4 கிலோ குட்காவை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடைகளுக்கு 'சீல்' வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ