விதை விநாயகர் விற்பனைக்கு
மதுரை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தோட்டக்கலைத் துறை சார்பில் மதுரை அண்ணாநகர், சொக்கிகுளம் உழவர் சந்தைகளில் பசுமை விதை விநாயகர் சிலைகள் இன்றும் நாளையும் (ஆக.26,27) விற்கப்படுகின்றன. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத களிமண்ணில் முள்ளங்கி விதைகளை சேர்த்து விநாயகர் சிலை தயாரிக்கப்பட்டுள்ளது. சிலையுடன் ஒரு கிலோ மண்புழு உரம், அரைக்கீரை விதை பாக்கெட்கள் சேர்த்து ரூ.130க்கு விற்கப்படுகிறது. சதுர்த்தி விழா முடிந்த பின் தொட்டியில் விநாயகரை கரைத்து மண்புழு உரமிட்டால் முள்ளங்கி விதைகள் வளர ஆரம்பிக்கும். அடுத்து தேவைப்பட்டால் அரைக்கீரை விதைகளை விதைக்கலாம்.