மேலும் செய்திகள்
சிறுதொழில்களையும் உள்ளடக்கியதே வளர்ச்சி
08-Nov-2026
மதுரை: மதுரை வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் துறை சார்பில் சேடப்பட்டி அ. காமாட்சிபுரம் கிராமத்தில் சிறுதானியங்களில் தரமான விதை உற்பத்தி தொழில் நுட்பம் குறித்து 5 நாட்கள் பயிற்சி நடந்தது. ஐதராபாத் இந்திய சிறுதானிய ஆராய்ச்சி நிறுவன நிதியுதவி செய்தது. விழாவில் பேராசிரியர் அலெக்ஸ் ஆல்பர்ட் வரவேற்றார். துறைத்தலைவர் சுஜாதா பேசுகையில் ‘‘விதைக்கலவன்கள் இருந்தால் விதையின் தரம் குறையும். எனவே தரமான விதைக்கான ரகங்களை விதைத்துாய்மை, ரகத்துாய்மை அறிந்து விதைத்தால் விதை உற்பத்தியின் மூலம் அதிக லாபம் பெறலாம்’’ என்றார். விவசாயிகளுக்கு விதை அமிர்த விதை நேர்த்தி செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
08-Nov-2026