மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு பாராட்டு
30-Oct-2024
சோழவந்தான்: மதுரை ஆயுதப்படை மைதானத்தில் வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நடந்தது. இதில் சோழவந்தான் காமராஜர் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். வட்டு எறிதல் 19 வயது பிரிவில் மாணவி ராகவி, 14 வயது பிரிவில் மாணவர்கோகுல் நாத் முதலிடம் பிடித்து மாநில போட்டிக்கு தேர்வாகினர். நவம்பரில் ஈரோட்டில் நடக்கும் போட்டியில் மதுரை மாவட்டம் சார்பில் பங்கேற்க உள்ளனர். வென்ற மாணவர்கள், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் பெருமாள், சவுந்தரபாண்டி, சகாய மலர்விழி ஆகியோரை பள்ளித் தாளாளர் பென்சாம், தலைவர் சிவபாலன், முதல்வர் கலைவாணி உட்பட பலரும் பாராட்டினர்.
30-Oct-2024