ஆசிய கராத்தே போட்டிக்கு தேர்வு
மதுரை; மதுரை எப்.எப்.எப். கோஜூரியூ கராத்தே பள்ளி மாணவர்கள் ஆசிய கராத்தே போட்டிக்கு தேர்வு பெற்றனர்.யூனியன் கோஜூரியூ கராத்தே டூ இந்தியா சம்மேளனம் சார்பாக இந்தாண்டு கோவை பாரதியார் பல்கலையில் தேசிய கராத்தே போட்டி நடந்தது. இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, மத்திய பிரதேசம், டில்லி, ஒடிசா, மகாராஷ்டிரா, ஹரியானாவைச் சேர்ந்த 1200 வீரர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு கோஜூ ரியூ கராத்தே சம்மேளனம் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்தது.தமிழக அணி சார்பில் மதுரை எப்.எப்.எப் கோஜூரியூ கராத்தே பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். டில்லி வேர்ல்டு பப்ளிக் பள்ளி மாணவன் ஹரிபிரணவ் 11 வயது சண்டை பிரிவில் வெண்கலம், சீனியர் பிரிவில் எப்.எப்.எப். மாணவர் முத்துசூர்யா வெள்ளி பதக்கம் வென்று ஆசிய கராத்தே போட்டிக்கு தேர்வாகினர். இருவரும் இந்திய அணி சார்பில் இலங்கையில் ஆசிய கோஜூ ரியூ கராத்தே சம்மேளனம் சார்பாக மே மாதம் நடக்கும் ஆசிய கராத்தே போட்டியில் விளையாட உள்ளனர். ஆசிய நடுவர் பாரத், கராத்தே பள்ளி நிர்வாகிகள் கவிகுமார், மனோஜ் பிரபாகரன், ஒருங்கிணைப்பாளர்கள் ரியாசுதீன், நிருபன்ராஜ், மாரி, பாலமுருகன் பாராட்டினர்.