மேலும் செய்திகள்
கருத்தரங்கம்
31-Jan-2026
மதுரை: மதுரை தியாகராஜர் கல்லுாரியில் தமிழ் உயராய்வு மையம் சார்பில், முதுகலைத்தமிழ் மாணவர்களுக்கான 2 ம் நாள் கருத்தரங்கம் நடந்தது. தமிழ்த்துறைத் தலைவர் காந்திதுரை முன்னிலை வகித்தார். பேராசிரியர் செந்தில்நாராயணன் வரவேற்றார். மாணவி சந்தனப்பிரபா 'சிலப்பதிகாரம் வஞ்சிக்காண்டத்தில் புறத்திணை செய்திகள்' என்ற தலைப்பிலும், மாணவர் குணசேகரன் 'மூடநம்பிக்கை சிறுகதை குறிப்பிடும் இக்கால நம்பிக்கை' என்ற தலைப்பிலும், மாணவி மதுமிதா, 'அறியப்படாத மதுரை தெருக்களின் பெயர்க்காரணம்' என்னும் தலைப்பிலும் கட்டுரை வாசித்தனர். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் உமா மகேஸ்வரி, சங்கீத் ராதா ஏற்பாடு செய்தனர். மாணவர் விக்னேஷ் நன்றி கூறி னார்.
31-Jan-2026