ஆர்.எல்.ஐ.எம்.எஸ்., கல்லுாரியில் மனிதவளம் குறித்து கருத்தரங்கம்
மதுரை: மதுரை ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் (ஆர்.எல்.ஐ.எம்.எஸ்.,) கல்லுாரி சார்பில், 'எச்.ஆர். கான்க்ளேவ் - மனிதவளம் 5.0' எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. மதுரையின் டாட் காம் இன்போவே நிறுவன மனிதவள மேலாளர் ஹேமலதா, டி.வி.எஸ்., சென்சிங் சொலுாஷன்ஸ் நிறுவன மனிதவள மேலாளர் பொன்னியின் செல்வன் ஆகியோர்தொழில்துறை, மனிதவள மேலாண்மையில் உருவாகி வரும் புதிய போக்குகள், வேலைவாய்ப்பு சூழலில் மனிதநலத்தின் முக்கியத்துவம், மனிதவளம் 5.0 என்ற கருத்தின் பயன்பாடு குறித்து பேசினர். தொழில்துறை சார்ந்த நடைமுறை அறிவு, மனிதவள மேலாண்மை சவால்கள், எதிர்கால வேலைவாய்ப்பு போக்குகள் குறித்த புரிதலை மாணவர்களுக்கு விளக்கினர். ஆர்.எல்.ஐ.எம்.எஸ்., இயக்குநர் சுப்பிரமணியன், பேராசிரியர்கள்ஆபிரகாம் பிரதீப், புகழேந்தி உட்பட எம்.பி.ஏ., மாணவர்கள்பங்கேற்றனர்.