உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கம்

சோழவந்தான்: திருவேடகம் விவேகானந்தா கல்லுாரியில் சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரை மற்றும் பாரதியார் நினைவு நாள் கருத்தரங்கம் நடந்தது. அகத்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் சுவாமிநாதன் வரவேற்றார். முதல்வர் ஜெயசங்கர் தலைமை வகித்தார். குலபதி சுவாமி அத்யாத்மானந்த ஆசி வழங்கினார். துணை முதல்வர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையை மாணவர்கள் ஜெயகிருஷ்ணன் ஆங்கிலத்திலும், சரவணகுமார் தமிழிலும் வழங்கினர். முன்னாள் துணை முதல்வர் இளங்கோ, ‘இன்றைய இளைய தலைமுறையினருக்கு சுவாமி விவேகானந்தர், பாரதியார் சிந்தனைகள்’ எனும் தலைப்பில் பேசினார். தமிழ்த்துறைத்தலைவர் ராமர் நன்றி கூறினார். வரலாற்றுத்துறை பேராசிரியர் முருகன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். ஆசிரியர்கள், பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். சுவாமி விவேகானந்த படிப்பக மையம், அகத்தரஉறுதி மையம், பாரதி சிந்தனையரங்கம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !