உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அங்கன்வாடி அருகே தேங்கும் கழிவுநீர்

அங்கன்வாடி அருகே தேங்கும் கழிவுநீர்

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் ஒன்றியம் மணியஞ்சி ஊராட்சியில் துவக்கப்பள்ளி, அங்கன்வாடி அருகே தேங்கும் கழிவுநீரால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இக்கிராமத்தில் சுந்தர்ராஜன் தெருவில் 2022ல் உயரமாக கழிவுநீர் வடிகால் கட்டியதால் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி வீடுகளின் கழிவுநீர் ரோட்டில் ஓடுவதுடன், துவக்கப்பள்ளி, அங்கன்வாடி அருகே ஆண்டுக்கணக்கில் தேங்கி உள்ளது. இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுத் தொல்லை, நோய் தொற்று அதிகரிக்கிறது. விஷப் பூச்சிகள் அச்சுறுத்துகின்றன. மூன்றாண்டுகளுக்கு மேலாக கழிவுநீர் வடிகால் பயன்பாட்டுக்கு வரவில்லை. கான்கிரீட் கற்கள் பெயர்ந்து சேதமடைந்து வருகின்றன. ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. கழிவுநீர் வடிகாலை உடனே பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ