உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / லோடுமேன்கள் பற்றாக்குறை: உர மூடைகள் தேக்கம்

லோடுமேன்கள் பற்றாக்குறை: உர மூடைகள் தேக்கம்

மதுரை: மதுரை கூடல்நகர் குட்ஷெட்டில், லோடு மேன்கள் பற்றாக்குறையால் ஆயிரக்கணக்கான யூரியா உர மூடைகள் தேக்கம் அடைந்தன. மதுரை உட்பட தென்மாவட்டங்களில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதற்கான யூரியா உள்ளிட்டஉரங்கள், வேளாண் துறை மூலம்பெறப்பட்டு கூட்டுறவுத் துறையின் கீழ் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமும், தனியார் உரக்கடைகளில் மானிய விலையிலும்விற்கப்படுகின்றன. தமிழ்நாடு கூட்டுறவு இணையம் (டான்பெட்) மூலம் உரங்கள் பெறப்பட்டு சங்கங்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. இச்சங்கங்களில் ஒரு மாதமாக யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுதும் தனியார் உரக்கடைகளில் கூடுதல் விலைக்கு யூரியா பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, உள்ளிட்ட தென்மாவட்ட விவசாய தேவைகளுக்காக, 23 ரயில் பெட்டிகளில் ஆயிரக்கணக்கான யூரியா உர மூடைகள் கூடல்நகர் குட்ஷெட்டிற்கு நேற்று மாலை 5:00 மணிக்கு வந்தன. அவற்றை கொண்டு செல்ல லாரிகளும் வந்தன. ஆனால் லோடு மேன்கள் இல்லாததால் லாரிகளைகுட்ஷெட்டிற்குள் அனுமதிக்க மறுத்துவிட்டனர். ரோட்டிலேயே அணிவகுத்து நின்றன. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு யூரியா உர மூடைகளை சம்பந்தப்பட்ட இடங்களுக்கு எடுத்துச் செல்ல நடவ டிக்கை எடுக்கவேண்டும்' என லாரி உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்தனர். கூடல்நகர் எச்.எம்.எஸ்., லோடிங் அன்லோடிங் பணியாளர் சங்கத்தலைவர் செந்தில்குமார் கூறுகையில், ''மாலை 5:00 மணிக்கு சரக்கு ரயிலில் உர மூடைகள் வருவது குறித்து தகவல் இல்லாததால் லோடு மேன்கள் வெளியூர் சென்று விட்டனர். மூடைகளை இறக்கி ஏற்றுவதற்கு 200 பேர் தேவையுள்ள நிலையில்,10 பேர் மட்டுமே உள்ளனர். மாலை 6:00 மணிக்கு மேல் சரக்குகள்கையாளப்படுவதில்லை. எனவே தற்போது பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. லோடு மேன்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது. நாளை (இன்று) அதிகாலை 5:00 மணி முதல் 2 மணி நேரத்தில் உர மூடைகள் லாரிகளில் அனுப்பி வைக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி