அரிவாள் வெட்டு
மேலுார்,: கீழவளவு வெள்ளைய தேவன் 29, நேற்று முன்தினம் இரவு ராஜவீதியில் நடந்து சென்றார். அவரை அதே ஊரை சேர்ந்த நவீன் 30, அரிவாளால் வெட்டியதில் காயமடைந்த வெள்ளையத்தேவன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். தொழில் போட்டியால் கடந்தாண்டு வெள்ளையத்தேவன் வெட்டியதில் நவீனுக்கு 2 விரல் துண்டானது. இந்த முன் விரோதத்தில் இச்சம்பவம் நடந்தது போலீசார் விசாரணையில் தெரிந்தது. வெள்ளையத்தேவன் குண்டாசில் கைதாகி, சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.