மேலும் செய்திகள்
பயணியர் வருமானத்தில் தெற்கு ரயில்வே முதலிடம்
24-Sep-2025
மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷனில், 'ரயில் ஒன்' செயலியை பிரபலப்படுத்த மவுன மொழி நாடகம் நடத்தப்பட்டது. முன்பதிவு, முன்பதிவில்லா டிக்கெட்டுகள், பிளாட்பாரம் டிக்கெட், சீசன் டிக்கெட், ரயில்கள் வருவதை டிராக் செய்தல், பி.என்.ஆர்., எண் சரிபார்த்தல், இருந்த இடத்திலேயே உணவு பெறுதல், புகார் தெரிவித்தல் உள்ளிட்ட அனைத்து ரயில் சேவைகளுக்கும் 'ரயில் ஒன்' செயலி, ஜூலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை பயணிகளிடையே பிரபலப்படுத்த திருச்சி பல்நோக்கு மண்டல ரயில்வே பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த முரளிதரன், மகேஸ்வரி, ராகவேந்திரா உள்ளிட்ட பயிற்றுநர்களுடன், 25 பயிற்சியாளர்கள் மவுன மொழி நாடகம் நடத்தினர். கோட்ட ரயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா, முதுநிலை வர்த்தக மேலாளர் கணேஷ், வர்த்தக மேலாளர் மோகனப்பிரியா, உதவி வர்த்தக மேலாளர் மணிவண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
24-Sep-2025