உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  ஆறாம் அறிவு குறைபாடுள்ள த.வெ.க., எம்.எல்.ஏ.,க்கள் அ.ம.மு.க., தினகரன் பேட்டி

 ஆறாம் அறிவு குறைபாடுள்ள த.வெ.க., எம்.எல்.ஏ.,க்கள் அ.ம.மு.க., தினகரன் பேட்டி

உசிலம்பட்டி: ''அடிப்படை அறிவில்லாததால் சட்டை போட வழியில்லை எனவும், பல்கலையை கல்லுாரியாக மாற்ற வேண்டும் எனவும் த.வெ.க.,வினர் பேசுகின்றனர்'' என அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன் கூறினார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மறைந்த பா.பி., தலைவர் மூக்கையாத்தேவர் நினைவிடத்தில் தினகரன் அஞ்சலி செலுத்தினார். அவர் கூறியதாவது: அறுபது ஆண்டு திராவிட ஆட்சிக்கு மாற்றாக சினிமா துறையில் இருந்து வந்துள்ளனர் என்று நம்பி த.வெ.க.,வுக்கு மக்கள் ஓட்டளித்தனர். ஆரம்பத்திலேயே அ.தி.மு.க., எம்.எல்.ஏ., க்கள் 25 பேரை நடுரோட்டில் நிறுத்தினர். அ.ம.மு.க., எம்.எல்.ஏ., வையும் அப்படித் தான். உசிலம்பட்டி மக்கள் சட்டை போட வழியில்லை எனவும், காமராஜ் பல்கலையை அரசு கல்லுாரியாக மாற்ற வேண்டும் எனவும் பேசுகின்றனர். அடிப்படை அறிவு இல்லாததே இதற்கு காரணம். அண்ணா காலத்தில் இளைஞர்களுக்கு அரசியல் அறிவோடு தான் மாற்றத்தை கொண்டு வந்தனர். இங்கு யாருக்காவது அடிப்படை புரிதல் இருக்கிறதா. ஆறாம் அறிவு கூட இல்லை என்பதையே காட்டுகிறது. முதல்வருக்கு எழுதி வைத்ததை கூட சரியாக பேசத் தெரியவில்லை. தமிழகத்தில் குதிரை பேரத்தை கொண்டு வந்தனர். அவர்களாகவே வீழ்ந்துவிடுவர். விஜய் அமைதியாக தெரிகிறாரே தவிர மிகவும் நரித்தனமாக, விஷமத்தன செயல்பாடுகளில் ஈடுபடுகிறார். நாளை (இன்று ) சட்டசபையில் அவரது பேச்சு சினிமா வசனம் போலவே இருக்கும். மேகமலை மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முந்தைய அரசு எதுவும் செய்யவில்லை என்பது தவறு என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்