மேலும் செய்திகள்
எஸ்.எல்.சி.எஸ்., மாணவிகளுக்கு பாராட்டு
18-Sep-2024
மதுரை : மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி (எஸ்.எல்.சி.எஸ்.,) மாணவர்கள் ஏ.சி.சி.ஏ., தேர்வில் வென்று சாதனை படைத்துள்ளனர்.இக்கல்லுாரியின் பி.காம்., மாணவர்கள் விக்னேஷ், இலக்கியா, சாகித்யா, ராஜ கோமதி, கிரேஸ் ரேச்சல், பிரிய தர்ஷினி, திவான், கருப்பையா. இவர்கள் உலக அளவில் நடத்தப்படும் அசோஷியேசன் ஆப் சார்ட்டர்டு சர்ட்டிபைடு அக்கவுண்டன்ட்ஸ் (ஏ.சி.சி.ஏ.,) பொதுத் தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்றனர்.மாணவர்களை முதல்வர் சுஜாதா, துணை முதல்வர் குருபாஸ்கர், டீன் பிரியா, துறைத் தலைவர் செல்வராஜ் பாராட்டினர்.
18-Sep-2024