மேலும் செய்திகள்
சாலையோரம் குப்பை எரிப்பு வாகன ஓட்டிகள் அவதி
30-Jan-2025
அலங்காநல்லுார்: கொண்டையம்பட்டியில் ஊராட்சி துவக்கப்பள்ளி அருகே ஊராட்சி மன்ற அலுவலகம், துணை சுகாதார நிலையம், பழைய பொருட்கள், பிளாஸ்டிக் கழிவுகளை சேமித்து வைத்துள்ள கோடவுன், வைக்கோல் படப்பு உள்ளது. கிராம பகுதிகளில் சேகரித்த குப்பையை புதிய பேட்டரி வாகனத்தில் கொண்டு வரும் பணியாளர்கள் பள்ளி அருகே எரிக்கின்றனர். குப்பையை தரம் பிரித்து மறுசுழற்சி செய்ய வேண்டும். அதற்கான பணியாளர்களுக்கு அதற்கான சம்பளம் வழங்கப்படுவதில்லை. இதனால் சேகரிக்கும் குப்பையை ஆங்காங்கே கொட்டி எரிக்கின்றனர். பள்ளி சுற்றுச்சுவர் அருகே எரிப்பதால் உருவாகும் புகையால் மாணவர்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் ஏற்படுகிறது. ஒன்றிய நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
30-Jan-2025