உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  எஸ்.என்., கல்லுாரிக்கு விருது

 எஸ்.என்., கல்லுாரிக்கு விருது

பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி, உன்னத் பாரத் அபியான் பிரிவுக்கு 2024--2025 கல்வியாண்டில் கிராம தன்னிறைவு அடைய மேற்கொண்ட முயற்சிக்காக கல்லுாரிக்கும், திட்ட ஒருங்கிணைப்பாளருக்கும் விருது வழங்கப்பட்டது. திண்டுக்கல் காந்தி கிராமம் பல்கலையில் நடந்த விழாவில் சிறந்த திட்ட ஒருங்கிணைப்பாளருக்கான விருது கல்லுாரி, உன்னத் பாரத் அபியான் திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் விஜயகுமாருக்கும், சிறந்த கல்லுாரி விருதை முதல்வர் சந்திரனுக்கும் வழங்கினர். நெய்வேலி என்.எல்.சி., இயக்குனர் வெங்கடாச்சலம், துாத்துக்குடி என்.டி.பி.எல்., தலைமை நிர்வாக அலுவலர்ஆனந்த ராமானுஜம், காந்திகிராம பல்கலை துணை வேந்தர் பஞ்சநாதம் வழங்கினர். விருது பெற்ற முதல்வர், திட்ட ஒருங்கிணைப்பாளருக்கு கல்லுாரியின் உன்னத் பாரத் அபியான் பிரிவு உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், தனலட்சுமி, பிரேம்குமார், கார்த்திகை செல்வி, இருளப்பன், அசாருதீன் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்