உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மண் திருட்டு வழக்கு : உயர்நீதிமன்றம் உத்தரவு

மண் திருட்டு வழக்கு : உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை : மதுரை மாவட்டம் நல்லுார் பாலமுருகன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை தெற்கு தாலுகாவிற்குட்பட்டது நல்லுார். இங்குள்ள புதுக்குளம் மற்றும் புளிச்சிக்குளம் கண்மாய்களில் சட்டவிரோதமாக செம்மண் அள்ளப்படுகிறது. தடுத்ததால் என்னை சிலர் தாக்கினர். மண் அள்ளும்லாரிகளை சிறைபிடித்தோம். சிலர் மீட்டுச் சென்றனர். கலெக்டர், எஸ்.பி.,கனிமவள உதவி இயக்குனர், பெருங்குடி போலீசில் புகார் அளித்தேன். சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.மனுவை அதிகாரிகள் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை