உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தினமலர் செய்தியால் தண்ணீருக்கு தீர்வு

தினமலர் செய்தியால் தண்ணீருக்கு தீர்வு

மேலுார்: மேலுார், கொட்டக்குடி செல்லும் பெரியாற்று கால்வாயில் இருந்து சுந்தரப்பன்குளம் மற்றும் மாத்தி கண்மாய்க்கு செல்லும் கால்வாய் பராமரிப்பில்லாமல் இருந்தது. கால்வாய் தண்ணீர் பிளாட்டுகளில் பாய்ந்து வீணானது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவபிரபாகர் தலைமையில் ஊழியர்கள் வரத்தை தண்ணீரை நிறுத்தியதால் அது வீணாவது தடுக்கப்பட்டது. விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ