உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தினமலர் செய்தியால் தீர்வு

தினமலர் செய்தியால் தீர்வு

சோழவந்தான்: சோழவந்தான் தென்கரை வைகையாற்றுப் பாலத்தில் இருபுறமும் மண் குவிந்து, தென்னை மட்டைகள் நிறைந்திருந்தன. இவை மழைநீர் வெளியேறும் குழாய்களை அடைத்ததால் பாலத்தில் மழைநீர் தங்கி போக்குவரத்திற்கு சிரமம் ஏற்பட்டதுடன் பாலத்தின் வலிமை குறைந்து விபத்து ஏற்படவும் வாய்ப்பிருந்தது. மேலும் சிதறி கிடக்கும் மட்டைகளால் டூவீலரில் செல்வோர் பலர் தடுமாறி விழுந்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. பேரூராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மண் மட்டைகளை அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !