உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கிராமங்களில் விதைப்பு பணிகள் மும்முரம்

கிராமங்களில் விதைப்பு பணிகள் மும்முரம்

பேரையூர்: பேரையூர் பகுதியில் 3 நாட்களுக்கு முன் மழை பெய்ததால் சிலைமலைப்பட்டி, கூவலபுரம், கீழப்பட்டி லட்சுமிபுரம், சந்தையூர் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விதைப்பு பணிகள் துவங்கியுள்ளன. இங்கு மானாவாரி நிலங்களில் தானிய பயிர்களான கம்பு, சோளம், திணை, குதிரைவாலி, கேழ்வரகு, மக்காச்சோளம், பருத்தி, பயறு வகைகளை விதைத்து வருகின்றனர். விவசாயிகள் கூறுகையில், ''மழையை எதிர்பார்த்து நிலத்தை உழவடை செய்து தயார் நிலையில் வைத்திருந்தோம். மழை பெய்ததில் நிலம் ஈரமாக உள்ளதை பயன்படுத்தி விதைத்து வருகிறோம்'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை