உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பாடகர் எஸ்.பி.பி. 5ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி

பாடகர் எஸ்.பி.பி. 5ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி

மதுரை : மறைந்த இசை மேதை எஸ் பி பாலசுப்ரமணியனின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஓட்டி மதுரையில் நடைபெற்ற விழாவில் அவரது பாடல்களை பாடி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.இது பற்றி விவரம் வருமாறு; இசை மேதை எஸ்.பி.பி. ஐந்தாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை எஸ் எஸ் காலனி ஸ்ரீ மகா பெரியவா கோவிலில் மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பின் சார்பில் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. ஆடிட்டர் சேது மாதவா தலைமை தாங்கி அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.நிகழ்வில் மதுரை ஸ்டார் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் வாசுதேவன்,கன்னியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.தொடர்ந்து பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் மற்றும் வட மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை ஆடிட்டர் சேது மாதவா மற்றும் வாசுதேவன் வழங்கினாரகள்.நிகழ்ச்சி ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ