வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எளிமை அன்பு இதன் இலக்கணமான மஹா பெரியவா...அனைவருக்கும் அருள் புரிய ப்ராத்திப்போம்...உண்மையான பக்தி பெருகி சங்கடங்கள் விலகட்டும்... ஹர ஹர சங்கரா ஜய ஜய சங்கரா
மதுரை அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில் காஞ்சி மகா பெரியவரின் அனுஷ உற்சவம் எஸ் எஸ் காலனி எஸ் எம் கே திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது அனுஷ உற்சவம்
மகா பெரியவா, உம்மாச்சி தாத்தா என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படுகிற முக்தி அடைந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி மகா ஸ்வாமிகளின் திருநட்சத்திரமான அனுஷ உற்சவம் மதுரை எஸ் எஸ் காலனி எஸ் எம் கே திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு மகாபெரியவர் விக்ரகம் மற்றும் வெள்ளிப் பாதுகைக்கு திருமஞ்சனத்திரவியப் பொடி,. மஞ்சள் பொடி, பஞ்சகவ்யம், பால், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், திருநீறு, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைப் பெற்றது. தொடர்ந்து ருத்ரா அபிஷேகம் நடைப்பெற்றது.அனுஷ வைபவத்தை முன்னிட்டு கவிஞர் சண்முக . திருக்குமரன் குருவாய் வருவாய் அருள்வாய் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார் இந்நிகழ்வினை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு ஏற்பாட்டில் சந்தோஷ் சாஸ்திரிகள் தலைமையிலான வேத விற்பன்னர்கள் நடத்தினர். திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
எளிமை அன்பு இதன் இலக்கணமான மஹா பெரியவா...அனைவருக்கும் அருள் புரிய ப்ராத்திப்போம்...உண்மையான பக்தி பெருகி சங்கடங்கள் விலகட்டும்... ஹர ஹர சங்கரா ஜய ஜய சங்கரா