கொழிஞ்சிப்பட்டியில் திட்ட சிறப்பு முகாம்
பாலமேடு: பாலமேடு அருகே தெத்துார் ஊராட்சி கொழிஞ்சிப்பட்டியில் டி.மேட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கான 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் நடந்தது. எம்.எல்.ஏ., வெங்கடேசன் துவக்கி வைத்தார். அலங்காநல்லுார் பி.டி.ஓ.,க்கள் வள்ளி, கலைச்செல்வி முன்னிலை வகித்தனர். தி.மு.க., ஒன்றிய செயலாளர் பரந்தாமன்,கிளைச் செயலாளர் தனி ராஜன், முன்னாள் ஊராட்சி தலைவர் ஈஸ்வரி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பிரதாப் உட்பட பலர் பங்கேற்றனர். 154 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.