உங்களுடன் ஸ்டாலின் முகாம்
சோழவந்தான்: சோழவந்தான் அருகே மேலக்காலில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. எம்.எல்.ஏ., வெங்கடேசன் துவக்கி வைத்தார். மேலக்கால், திருவேடகம் ஊராட்சியினரிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. 15 துறைகளைச் சேர்ந்த 46 சேவைகள் வழங்கப்பட்டன. பி.டி.ஓ., பொற்செல்வி, உதவி பொறியாளர் மாலதி, ஊராட்சி செயலாளர்கள் விக்னேஷ், சுதாபிரியா உட்பட பலர் பங்கேற்றனர்.