மாநில கலைத்திருவிழா போட்டி: 52 மதுரை மாணவர்கள் வெற்றி
மதுரை: கல்வித்துறை நடத்திய மாநில கலைத்திருவிழா போட்டிகளில் மதுரை மாவட்டத்தில் 52 மாணவர்கள் வெற்றி பெற்றனர். இப்போட்டிகள் கரூர், ஓசூர், சேலம், புதுக்கோட்டையில் நடந்தன. மதுரை மாவட்டத்தில் இருந்து 441 மாணவர் பங்கேற்றனர். குழு போட்டிகளான பரதநாட்டியத்தில் காக்கைபாடினியார் மாநகராட்சி பெண்கள், பொம்மலாட்டத்தில் சேடபட்டி அரசு மேல்நிலை பள்ளி, பிரீ ஸ்டைல் நடனத்தில் ஒத்தக்கடை மாதிரி பெண்கள் மேல்நிலை, தனி போட்டியான கிராமிய, நாட்டுப்புற நடனத்தில் வலையப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலை, பறை போட்டியில் கருமாத்துார் கிளாரட் பள்ளிகளின் மாணவர்கள் முதலிடம் வென்றனர். நாட்டுப்புற நடனத்தில் நேரு வித்யாலயா, திருக்குறள் ஒப்புவித்தலில் அழகிச்சிபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க, புல்லாங்குழலில் புனித வளனாள் பெண்கள் மேல்நிலை, பொம்மலாட்டம் குழு போட்டியில் லட்சுமி புரம் டி.வி.எஸ்., பானை ஓவியத்தில் தெப்பக்குளம் தியாகராஜர் மாதிரி பள்ளிகளின் மாணவர்கள் 2ம் இடங்களில் வென்றனர். பலகுரல் பேச்சில் ஒத்தக்கடை மாதிரி பெண்கள் மேல்நிலை, தனி பரதநாட்டியத்தில் ஓ.சி.பி.எம்., பெண்கள் மேல்நிலை, வயலினில் சேதுபதி மேல்நிலை, காகிதக்கூழ் பொருட்கள் செதுக்குச்சிற்பத்தில் சவுராஷ்டிரா பெண்கள் மேல்நிலை, குழு பிரீ ஸ்டைல் போட்டியில் துாய மரியன்னை மேல்நிலை, வீணையில் குயவர்பாளையம் விருதுநகர் ஹிந்துநாடார் மேல்நிலை பள்ளிகளின் மாணவர்கள் 3ம் இடங்களையும் வென்றனர். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான போட்டிகளில் 4 மாணவர்கள் மாநிலத்தில் முதலிடமும், ஒருவர் இரண்டு, ஒருவர் 3ம் இடம் என மொத்தம் 52 பேர் மாநில போட்டிகளில் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை சி.இ.ஓ., தயாளன், டி.இ.ஓ., செந்தில்குமார், உதவித் திட்ட அலுவலர் சரவணமுருகன் உள்ளிட்டோர் பாராட்டினர்.