மேலும் செய்திகள்
மாநில குத்துச்சண்டை போட்டி போடி மாணவர்கள் சாதனை
03-Jul-2025
மதுரை: பள்ளி மாணவிகளுக்கு இடையிலான மாநில ஐவர் பூப்பந்து போட்டி சென்னை சேது பாஸ்கரா மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் மதுரை ஓ.சி.பி.எம்., பள்ளி மாணவிகள் கவி பிரியா, ஹாசினி, ஸ்ருதி, நிகிதா, சோபிகா, முத்துமீனா, ரக்ஷிதா, கோபிகா, சுபாஷினி, மோனிஷா பங்கேற்றனர். இறுதிப் போட்டியில் சென்னை ஜெஸி மோசஸ் பள்ளி மாணவிகளை 35 - 28, 35 - 31 செட்களில் வீழ்த்தி தங்கப்பதக்கம், கோப்பை வென்று ரூ.25ஆயிரம் ரொக்கம் பெற்றனர். நிகிதா சிறந்த வீராங்கனை விருது பெற்றார். பள்ளி முதல்வர் செல்வகுமார், ஒய்.எம்.சி.,ஏ. கல்லுாரி உடற்கல்வித் துறை உதவிப் பேராசிரியர் மெர்லின் தங்க டேனியல் பரிசு வழங்கினர். சாய்ராம் பொறியியல் கல்லுாரியில் நடந்த போட்டியில் ஓ.சி.பி.எம். மாணவிகள் பங்கேற்றனர். இறுதிப் போட்டியில் சென்னை பல்லாவரம் செயின்ட் தெரசா பள்ளி மாணவிகளை 35 - 27, 35 - 30 செட்களில் வீழ்த்தி தங்கப்பதக்கம், கோப்பையை வென்றனர்.
03-Jul-2025