உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாநில சாம்பியன்ஷிப் பாட்மின்டன் போட்டி

மாநில சாம்பியன்ஷிப் பாட்மின்டன் போட்டி

மதுரை: தமிழ்நாடு இளைஞர் விளையாட்டு கழகம் சார்பில் மாநில சாம்பியன்ஷிப் பாட்மின்டன் போட்டி மதுரையில் நடந்தது.போட்டி முடிவுகள்:ஆண்கள் 10 வயது ஒற்றையர் பிரிவில் லக்சன்முத்து (21 - - 14) வீராவை வீழ்த்தினார். 12 வயது சவீத் (21 - -17) சென்சுதரையும் 14 வயது பிரிவில் மலர்அமுதன் (21 -- 18) நவீன்ராஜை வீழ்த்தினர். 17 வயது பிரிவில் தர்ஷன் (21- - 18) விஸ்ணு ராஜாவையும் 19 வயது பிரிவில் விஸ்வந் (21 -- 20) கார்த்திக்கையும் 21 வயது பிரிவில் கவிநயன் (21 -- 12) நவீன்ராஜையும் ஓபன் பிரிவில் கந்தவேல் (21- - 16) நவீனை வீழ்த்தினார்.பெண்கள் பிரிவு: 10 வயது ஒற்றையர் தனுஸ்ரீ (21 - -19) ஸ்ரீநிதியையும் 14 வயது பிரிவில் சுமித்ரா (21- - 15) பரிவர்த்தினியையும் 17 வயது பிரிவில் ஹர்சியா (21 -- 17) ஸ்ரீவர்ஷினியை வீழ்த்தினார். 19 வயது பிரிவில் பிளஸ்சி (30 -- 26) அனிதாவையும் 21 வயது பிரிவில் அனிதா (21 - -12) யாழினியை வீழ்த்தினர்.14 வயது இரட்டையர் பிரிவில் அகிலன், சூரியா ஜோடி (21 -- 13) சுரேஷ், கிருஷ்ணா ஜோடியை வீழ்த்தினர். 17 வயது பிரிவில் தர்ஷன், விஷ்ணு ஜோடி (21 --10) சர்வேஸ்வரன், அகிலன் ஜோடியை வீழ்த்தினர். 19 வயது பிரிவில் விஸ்வந், கவிநயன் ஜோடி (21 -- 18) சுரேஷ், கிேஷார் ஜோடியை வீழ்த்தினர். ஓபன் பிரிவில் கந்தவேல், சாலமன் ஜோடி (21 -- 19) சுந்தர், கிர்த்திக் ஜோடியை வீழ்த்தினர்.உடற்கல்வி ஆசிரியர் குமார் பரிசு வழங்கினார். வெற்றி பெற்றவர்களை நடுவர்கள் சுரேஷ், ஜனா, குல்லு பாராட்டினர். விளையாட்டு கழக செயலாளர் அன்பரசன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ