மே 24,25ல் மாநில கபடி போட்டி
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி பிறந்த தினத்தை முன்னிட்டு எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில் மாநில கபடி போட்டி மே 24, 25ல் நடக்கிறது. முதல் பரிசு ரூ.71 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.51 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ. 31 ஆயிரம், நான்காம் பரிசு ரூ. 21 ஆயிரம், 5 முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ. 5 ஆயிரம் வழங்கப்படுகிறது.இதுவரை 50க்கும் மேற்பட்ட அணிகள் பதிவு செய்துள்ளன.போட்டியில் பங்கேற்க விரும்பும் அணிகள் 87547 98828ல் பதிவு செய்து கொள்ளலாம் என இளைஞரணி செயலாளர் ரமேஷ் தெரிவித்தார்.