உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாநில கராத்தே போட்டி

மாநில கராத்தே போட்டி

திருமங்கலம்: உலக சோட்டோகான் கராத்தே அமைப்பு சார்பில் திருமங்கலத்தில் மாநில அளவிலான ஓபன் கராத்தே சாம்பியன் போட்டிகள் நடந்தன. இந்தப் போட்டியில் மதுரை, திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆறு முதல் 18 வயதுள்ள 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். உலக சோட்டாகான் கராத்தே அமைப்பின் தமிழகப் பிரிவு செயலாளர் பால்பாண்டி தலைமை வகித்தார். தலைவர் ஹம்ஸா போட்டிகளை தொடங்கி வைத்தார். அதி காலை 5:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை போட்டிகள் நடந்தன. பல்வேறு பிரிவு போட்டிகளில் மாணவர்கள் சாகசத்தை செய்து காட்டினார். வென்ற மாணவர்களுக்கு இந்தியன் சிலம்ப பள்ளி நிறுவனர் மணி பரிசு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை