உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாநில சிலம்ப போட்டி

மாநில சிலம்ப போட்டி

மதுரை: வைகை மார்ஷியல் ஆர்ட்ஸ் சார்பில் மதுரை பாத்திமா கல்லுாரியில் மாநில சிலம்பப் போட்டி நடந்தது. 650 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் அப்பன்திருப்பதி கஸ்துாரிபாய் காந்தி பள்ளி மாணவர்கள் 5 தங்கம், 14 வெள்ளி, 10 வெண்கல பதக்கங்களை வென்றனர். கதிர்வேல், தானிஷ்குமார், தன்யாஸ்ரீ, சர்வேஸ்வரன், தேசபிரியன் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர். சுபாஸ்ரீ, மாலினி, ஹர்ஷிகா, ஷாலினி, சுபாஷ், ரித்திக் ரோஷன், சக்திவேல், நவீன்ராஜ், ஜெகதீஷ், தினேஷ், யோஹித், அமிழ்தன், மிருதிளஸ்ரீனி, நிஷாந்த் ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்றனர். கருணேஷ், ரக் ஷான், ஸ்ரீதர், ஹரிவர்தன், அல்ஷிபா, அனுஸ்ரீ, கீர்த்தி, தர்ஷனா, யோகேஸ்வரி, அர்ச்சுனன் ஆகியோர் வெண்கல பதக்கம் வென்றனர். முதல்வர் மாலதி, பயிற்சியாளர் கவுரிசங்கர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !