உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / படித்துறைக்கு படி அளக்குமா சோழவந்தான் பேரூராட்சி

படித்துறைக்கு படி அளக்குமா சோழவந்தான் பேரூராட்சி

சோழவந்தான்: சோழவந்தானில் பள்ளப்பட்டி ரோட்டில் சனீஸ்வரன் கோயில் எதிரே வைகை படித்துறை சீரமைக்கப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.தற்போது புதர் மண்டியும், குப்பை நிறைந்தும் காணப்படுகிறது. இரவில் மது அருந்தவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறிவிட்டது.வைகையில் புதிய பாலம் கட்டும் போது இப்படித்துறை மாற்றுப்பாதையாக பயன்பட்டது. அப்போது சீரமைக்கப்படாததால் தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அர்ச்சகர் ராமசுப்ரமணியன் கூறியதாவது: அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம், ஜெனகை மாரியம்மன் கோயில் அக்னிச்சட்டி, பால்குடம், தீர்த்தவாரி மற்றும் பிற கோயில் விழாக்கள் அனைத்தும் ஆற்றைச்சார்ந்தே நடக்கின்றன.கோயிலில் அபிஷேக நீர் இங்கிருந்தே எடுத்துச்செல்லப்படும்.முன்னர் இந்த இடம் துாய்மையாகவும், புனிதமாகவும் இருந்தது. தற்போது மோசமாக உள்ளது. பேரூராட்சி நிர்வாகம் புதிய படித்துறை அமைத்து தர வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ