உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வீணாகிய குடிநீர் நிறுத்தம்

வீணாகிய குடிநீர் நிறுத்தம்

கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி ஊராட்சி அலுவலக பகுதியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி மூலம் இப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டது.தொட்டியில் தண்ணீரை நிரப்புவதற்கு மோட்டாரை இயக்கும் ஆப்ரேட்டர் நிறுத்தாமல் விட்டதால் தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகியது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக ஊராட்சி செயலர் சிவராமகிருஷ்ணன் ஏற்பாட்டின் பேரில் தொட்டி நிரம்பும் தண்ணீர் குழாய் வழியாக சென்றதும் மோட்டாரை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதால் வீணாகிய குடிநீர் நிறுத்தப்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி