உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தேசியப் பறவைகளுக்கு தெரு நாய்களால் ஆபத்து

தேசியப் பறவைகளுக்கு தெரு நாய்களால் ஆபத்து

பேரையூர், : பேரையூரை சுற்றியுள்ள விவசாய நிலங்களில் திரியும் தேசியப் பறவையான மயில்களுக்கு, தெரு நாய்களால் ஆபத்து ஏற்பட்டுள்ளது.பேரையூர் வட்டாரத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு நுாற்றுக்கணக்கான மயில்கள் வசிக்கின்றன. இவை விவசாய நிலங்களில் பூச்சிகள், சிறு பாம்புகளை உணவாக உட்கொள்ளும். இதனால் இப்பகுதியில் மக்களோ, வெளி நபர்களோ மயில்களை வேட்டையாட, அவற்றுக்கு தொந்தரவு செய்யக் கூடாது என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். அவற்றை கண்காணித்து பாதுகாத்தும் வருகின்றனர். ஆனால் இப்பகுதியில் கூட்டமாக சுற்றித் திரியும் தெருநாய்கள், மயில்களை துரத்திச் சென்று கடித்து குதறுகின்றன. பீதியில் நாலாபுறம் சிதறி ஓடும் மயில்கள், மக்கள் வசிக்கும் பகுதியில் தஞ்சம் அடைகின்றன. கிராமங்களில் தெருநாய்கள் அதிகரித்துள்ளதால் மயில்களுக்கு பாதுகாப்பு குறைவாக உள்ளது. எனவே, தெரு நாய்களிடமிருந்து மயில்களை பாதுகாக்க வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி