உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தெருமறித்து பொங்கல் விழா

தெருமறித்து பொங்கல் விழா

திருப்பரங்குன்றம் : வேடர்புளியங்குளத்தில் தெருமறித்து பொங்கல் வைக்கப்பட்டது. தெருவில் வசிப்பவர்கள் அந்தந்த தெருவில் ஒன்றுகூடி பொங்கல் வைத்தனர். பின்பு மந்தையம்மன் கோயிலுக்கு கரகம் எடுத்துச் சென்றனர். அம்மனுக்கு மஞ்சள்பொடி, பால், வேப்பிலை, பூ கலந்த மஞ்சள்பால் அபிஷேகம் செய்யப்பட்டது. அம்மை நோயிலிருந்து மக்கள் குணமடைய வேண்டி முன்னோர்கள் இந்த தெருமறித்து பொங்கல் விழா கொண்டாடினர். அதை நினைவுகூரும் வகையிலும், உலக நலன், விவசாயம் செழிக்க, நோய்களிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டியும் ஆண்டுதோறும் இவ்விழா நடத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை