உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தேசியக்கொடியுடன் மாணவர் ஊர்வலம்

தேசியக்கொடியுடன் மாணவர் ஊர்வலம்

மதுரை : மதுரை ரயில்வே கோட்டம் சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் தேசிய கொடி ஏற்றுவது தொடர்பான 'ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி' எனும் பிரசாரம் ஆக. 2 முதல் நடக்கிறது. இதன் ஒருபகுதியாக ரயில்வே காலனியில் நடந்த தேசியக் கொடி பேரணியை மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா துவக்கி வைத்தார். ரயில்வே பள்ளி, தெற்கு ரயில்வே பெண்கள் நலச்சங்க பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் தேசியக் கொடி ஏந்தி வலம் வந்தனர். கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் ராவ், உள்கட்டமைப்பு முதன்மை திட்ட மேலாளர் ஹரிகுமார், ஊழியர் நல அதிகாரி சங்கரன் உட்பட பலர்பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி