உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கராத்தேயில் மாணவர்கள் சாதனை

கராத்தேயில் மாணவர்கள் சாதனை

திருமங்கலம்: மதுரை பரவை மங்கையர்க்கரசி கல்லுாரியில் கோபுகான் சிட்டோரியா கராத்தே அமைப்பின் சார்பாக தமிழ்நாடு இன்விடேஷனல் கராத்தே சாம்பியன்ஷிப் நடந்தது.இதில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த 200 மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தினர். இந்த போட்டி கட்டா மற்றும் குமிட்டே பிரிவில் நடந்தது. இதில் உலக சோட்டோகான் கராத்தே அமைப்பின் சார்பாக 20 மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதில் 11 வயதுக்கு கீழ் உள்ள கட்டா பிரிவில் திருமங்கலம் அபிநயா, நவிநீலன் முதல் பரிசும், 11 வயதுக்கு மேல் உள்ள பிரிவில் ஜெகத் கிஷோர், சஞ்சீவி, சுருத்திகா, சூரிய பிரகாஷ் ஆகியோர் முதல் பரிசும், இதே பிரிவில் லோக சரவணன், யாதவன், சஞ்சித், சோனிகா 2ம் பரிசும் பெற்றனர். சண்டை பிரிவில் ரக்ஷித்வீர், சுருத்திகா, கௌதம் கண்ணா முதல் பரிசும், தேஷ்னா சித்தார்த் 2ம் பரிசும் பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களை உலக ஷோட்டோகான் தமிழ்நாடு பிரிவு தலைவர் பால்பாண்டி, நிர்வாகி பாஸ்கர் மற்றும் பயிற்சியாளர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ