மேலும் செய்திகள்
மாவட்ட தடகள போட்டி; வாளவாடி பள்ளிக்கு பதக்கம்
02-Sep-2025
மதுரை, : தமிழ்நாடு குங்பூ சங்கம் சார்பில் மாநில குங்பூ போட்டி மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்தது. விளையாட்டு அலுவலர் ராஜா, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் அலாவுதீன் தலைமை வகித்தனர். கிராண்ட் மாஸ்டர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். தாலு, சாண்டா பிரிவுகளில் நடந்த போட்டிகளில் 10 மாவட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். ஆடவர் 9 வயது தாலு பிரிவில் ஜெயின் பள்ளி யுகன் ஒரு தங்கம், ஒரு வெண்கலம் வென்றார். மகளிர் பிரிவில் விகாசா வேல்ர்டு பள்ளி சமீரா ஒரு தங்கம், ஒரு வெள்ளி வென்றார். சப் ஜூனியர் பிரிவில் ஜெயின் பள்ளி கவிஷ் 2 தங்கம், இந்தியன் பப்ளிக் பள்ளி ஆதன் சாஸ்தா வெண்கலம் வென்றனர். மகளிர் பிரிவில் மேரிஆன் பள்ளி வருணிதா ஒரு தங்கம், ஒரு வெள்ளி வென்றார். ஜூனியர் சாண்டா பிரிவில் மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி மாணவர் ஸ்ரீநிஷ் வேல் ஒரு தங்கம், தாய்சி பிரிவில் ஒரு தங்கம் வென்றார். சீனியர் சாண்டா பிரிவில் சபீக் ரபி தங்கப்பதக்கம், சுதாகர் வெள்ளிப்பதக்கம் வென்றார். ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை மதுரை மாவட்டம் கைப்பற்றியது. குங்பூ சங்கத்தலைவர் சரவணன் பரிசு வழங்கினார். ஏற்பாடுகளை மதுரை சங்க செயலாளர் ரகு செய்தார்.
02-Sep-2025