29 ஆண்டுகளுக்குப்பின் சந்தித்த மாணவர்கள்
மதுரை : அழகர்கோவில் அருகே கல்லம்பட்டி ஆயிரவைசியர் கல்லுாரியில் 1994 - 97 வரை இளங்கலை அறிவியலில் உயிர்வேதியியல் (பயோ கெமிஸ்ட்ரி) படித்த மாணவர்கள் 29 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் குடும்பத்துடன் சந்தித்தனர்.கல்லுாரி கால வாழ்க்கையை நினைவு கூர்ந்த அவர்கள், பயிற்றுவித்த கல்லுாரி ஆசிரியர்களை அழைத்து வந்து மரியாதை செய்தனர்.முன்னாள் மாணவர்கள் ஜெயகணேஷ், ரகுநாத், விக்டர் ஜெரால்டு லியோ, ராம்குமார், பாலாஜி, சுஜாதா, ராஜா உட்பட பலர் இந்த சந்திப்புக்கு மாணவர்களை தொடர்பு கொண்டு ஏற்பாடு செய்தனர்.தாளாளர் ஜெயராமன், முதல்வர் சிவாஜிகணேசன், மதுரை காமராஜ் பல்கலை சிண்டிகேட் உறுப்பினர்தீனதயாளன், பேராசிரியர்கள் சரவணன், சொர்ணலதா, ராஜேஷ், ராமமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.