பள்ளிக்கு ரோடு கேட்டு போராடிய மாணவர்கள்
உசிலம்பட்டி: வி.பெருமாள்பட்டி அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளிக்கு செல்ல 200 மீ., அளவில் தனிநபர்களின் பட்டா இடம் உள்ளதால் ரோடு வசதி இல்லை. தனியார் நிலங்களின் வழியாக மாணவர்கள் சென்று வருகின்றனர். ரோட்டிற்காக அளவிடும் பணி நடந்த போது பட்டா இடங்களால் பாதை குறுகியதால் ரோடு அமைக்கும் பணி தாமதமானது. ரோட்டுக்கு இடம் கொடுக்க பட்டாதாரர்கள் மறுத்தனர். ரோடு வசதிகேட்டு நேற்று காலை கிராம மக்கள், மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர். போலீசார், ஊரகவளர்ச்சி, வருவாய்த்துறை அலுவலர்கள் பட்டாதாரர்களிடம் பேசினர். ரோடு அமைக்க இடம் தருவதாக சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.