உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மழைநீர் ஒழுகும் வகுப்பறை அவதிப்படும் மாணவர்கள்

மழைநீர் ஒழுகும் வகுப்பறை அவதிப்படும் மாணவர்கள்

வாடிப்பட்டி : வாடிப்பட்டி தாதம்பட்டி துவக்கப்பள்ளி கட்டடம் பராமரிப்பின்றி உள்ளதால் மழை நீர் வகுப்பறைக்குள் ஒழுகுகின்றது. இதனால் மாணவர்கள் ஈரமான தரையில் அமர்ந்து படிக்கின்றனர். இப்பள்ளியில் 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு 2008ல் கட்டப்பட்ட 2 வகுப்பறைகள் கான்கிரீட் கட்டடம் பராமரிக்கப்படாமல் உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மழை நேரத்தில் வகுப்பறை கட்டடம் ஒழுகுகிறது. இதனால் வகுப்பறை தளம் ஈரமாகிறது. ஈரத்தரையில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள் சளி, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளை சந்திப்பதுடன், பாடம் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். பலமுறை வகுப்பறை கட்டடங்களை பார்வையிட்டு சென்ற ஒன்றிய அதிகாரிகள் பராமரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்பது பெற்றோர் குற்றச்சாட்டு. வகுப்பறை கட்டடங்களை பராமரிக்க கலெக்டர் பிரவீன் குமார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை