உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போட்டிகளில் வென்ற மாணவர்கள்

போட்டிகளில் வென்ற மாணவர்கள்

திருப்பரங்குன்றம் : கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு மதுரை மண்டல கல்வி இணை இயக்குனர் உத்தரவுப்படி சவுராஷ்டிரா கல்லுாரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.தமிழ்த்துறை நடன கோபாலர் தமிழ் மன்றம் சார்பில் நடந்த போட்டிகளை செயலாளர் குமரேஷ் துவக்கி வைத்தார். துறைத் தலைவர் குபேந்திரன் வரவேற்றார். முதல்வர் ஸ்ரீனிவாசன் அறிமுக உரையாற்றினார்.வெற்றி பெற்ற மாணவர்கள் : குறும்பட போட்டியில் மூன்றாம் ஆண்டு பி.எஸ்.சி. கணினி அறிவியல் மாணவர் பால வெற்றிவேல் முதல் பரிசு, பி.பி.ஏ. மாணவி அமிர்தவர்ஷினி 2ம் பரிசு, பி.எஸ்.சி. ஐ.டி. மாணவர் ஹரி விக்னேஷ் 3ம் பரிசு வென்றனர். திரைச்சுருள் போட்டியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு மாணவர் அஜய்குமார் முதல் பரிசு, பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு கணினி அறிவியல் மாணவர் குரு விக்னேஷ் 2ம் பரிசு, மூன்றாம் ஆண்டு பி.எஸ்.சி. கணினி அறிவியல் மாணவர் நாகேந்திர பிரசாத் 3ம் பரிசு வென்றனர்.ஓவிய போட்டியில் முதலாம் ஆண்டு பி.காம் மாணவர் வீரசக்திவேல் முதல் பரிசு, மூன்றாம் ஆண்டு பி.எஸ்.சி. ஐ.டி. மாணவர் விஷ்ணுகுமார் 2ம் பரிசு, மூன்றாம் ஆண்டு பி.காம். மாணவி வாசவி 3ம் பரிசு வென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை