உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சிலம்பப் போட்டியில் மாணவர்கள் வெற்றி

சிலம்பப் போட்டியில் மாணவர்கள் வெற்றி

வாடிப்பட்டி : ராமநாதபுரத்தில் உலக சிலம்ப விளையாட்டு சங்கம், தமிழ்நாடு கம்பு கழகம் சார்பில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி நடந்தது. பரவை ஆசான் காட்டு ராஜா இலவச சிலம்பப் பயிற்சி பள்ளி மாணவர்கள் 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தனித்திறன், ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, குழு போட்டிகளில் 10 முதல் பரிசும், 9 இரண்டாம் பரிசும், 3 மூன்றாம் பரிசு பெற்றனர். குழு போட்டியில் முதலிடம் பிடித்தனர். மாணவர்கள், பயிற்சியாளர்கள் இன்பவள்ளி, முத்துநாயகத்தை பெற்றோர், கிராமத்தினர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை